தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (06.07.2024): வாய்ப்புகள் கிடைக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan (06.07.2024): வாய்ப்புகள் கிடைக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jul 06, 2024 05:37 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 06) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (06.07.2024): வாய்ப்புகள் கிடைக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Today Rasipalan (06.07.2024): வாய்ப்புகள் கிடைக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

மேஷம்

நண்பர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். 

ரிஷபம்

மனதளவில் சிறு சிறு மாறுதல்கள் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.  வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். 

மிதுனம்

அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது.  மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.

கடகம்

வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் அனுசரித்துச் செல்லவும். 

சிம்மம்

கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் சுப காரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். 

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.  இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். வர்த்தக துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் சற்று கவனம் தேவை. 

துலாம்

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். 

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். 

தனுசு

 மறைமுகமான சில தடைகளை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மகரம்

தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். 

கும்பம்

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 

மீனம்

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்