Today Rasipalan (01.07.2024): மாதத்தின் முதல் நாள் எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 01) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
மேஷம்
குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கையாளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்.
ரிஷபம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வித்தியாசமான செயல்களின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
இலக்கை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய நம்பிக்கை ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் பிறக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும்.
கடகம்
உறவினர்களின் வருகை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். முயற்சிகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.
சிம்மம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நன்மையை தரும். பூர்வீக பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கன்னி
வரவுக்கேற்ப செலவு உண்டாகும். மற்றவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களிடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
துலாம்
எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய துறை சார்ந்த செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். இறைப்பணிகள் மூலம் மனதளவில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.
விருச்சிகம்
வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தன வரவுகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
தனுசு
வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். உடனிருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதளவில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
மகரம்
உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மறையும்.
கும்பம்
வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்களின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
மீனம்
சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்