தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (31.01.2024): நல்லதே நடக்கும்..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (31.01.2024): நல்லதே நடக்கும்..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 31, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 31 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 31ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
ஜனவரி 31ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

மேஷம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனை மேம்படும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவார்கள்.

கடகம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 

சிம்மம்

திடீர் தனவரவு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பேச்சுக்களில் கனிவு வேண்டும். புதுவிதமான ஆடை சேர்க்கை உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். ஆன்மிக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி

முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். மூத்த சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும்.

துலாம்

புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியில் இருந்துவந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாகும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.  வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும்.

தனுசு

சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

கும்பம்

நண்பர்களின் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.

மீனம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.