Today Rasipalan (30.01.2024):மறைமுக தொந்தரவு உண்டு..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 30 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். தடையாக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் மேம்படும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டு. செயல்பாடுகளில் பதற்றமின்றி நடந்து கொள்ளவும். தந்தைவழி வியாபாரப் பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும்.
மிதுனம்
புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசு சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு ஏற்படும்.
கடகம்
முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும்.
சிம்மம்
புதியவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் உத்வேகமான சிந்தனை உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும்.
கன்னி
தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.
துலாம்
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் சற்று ஏற்ற, இறக்கம் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும்.
விருச்சிகம்
தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கவலை குறையும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.
தனுசு
எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும்.
மகரம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
கும்பம்
நினைத்த பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். திடீர் செலவுகள் உண்டாகும். மறைமுக தொந்தரவு உண்டு.
மீனம்
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்