Today Rasipalan (29.01.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 29ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். கடன் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.
ரிஷபம்
எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில் நுட்ப செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். பணிகளில் தடைகள் குறையும். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும்.
மிதுனம்
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
கடகம்
கல்விப் பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.
சிம்மம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பொது வாழ்வில் மாறுபட்ட சூழல் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள்.
கன்னி
பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்பு குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.
துலாம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பு சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
விருச்சிகம்
ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீதித்துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும்.
தனுசு
வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடல் தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும்.
மகரம்
குழந்தைகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்
நட்பு வட்டம் விரிவடையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். புதிய துறை சார்ந்த அறிமுகம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
மீனம்
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனை மேம்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்