Tamil News  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 28, 2024

Today Rasipalan (28.01.2024): திடீர் யோகம் யாருக்கு?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 28, 2024 05:10 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 28 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 28ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஜனவரி 28ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். கடன் பிரச்னைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டு. வழக்கு விஷயங்களில் இழுபறி குறையும்.

ரிஷபம்

புதுமையான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். வாகன பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் தேவை. யோகம் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

கடகம்

உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.

கன்னி

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். சில முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.

துலாம்

மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும்.

விருச்சிகம்

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சட்டத்துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

வியாபாரம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் அகலும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பயணங்களில் கவனம் வேண்டும்.

மகரம்

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை உண்டாகும்.

கும்பம்

தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களால் நன்மை ஏற்படும். நண்பர்களுடன் நீண்ட தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிப்படையான குணத்தினால் மதிப்பு மேம்படும்.

மீனம்

தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்