Today Rasipalan (26.01.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஆங்கில புத்தாண்டு நாளில் (ஜனவாி 26) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சியில் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவும், புதிய பாதையும் புலப்படும். நண்பர்களின் ஆதரவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். இனம்புரியாத தேடல்களால் குழப்பம் ஏற்படும். கடன் சார்ந்த உதவி சாதகமாகும்.
ரிஷபம்
குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களினால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளிவட்டார நட்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான சூழல் ஏற்படும்.
மிதுனம்
செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
கடகம்
திடீர் பயணம் உண்டாகும். எந்தவொரு செயலையும் யோசித்து மேற்கொள்வதால் நன்மை ஏற்படும். பணிகளில் தடுமாற்றம் உண்டாகும். இணையப் பணிகளில் புதிய வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனை மேம்படும்.
சிம்மம்
சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
கன்னி
திடீர் தனவரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பகை விலகும் நாள்.
துலாம்
புதிய செயல்திட்டங்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம்
பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவு உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை செய்து முடிப்பீர்கள்.
தனுசு
மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடங்கள் அதிகரிக்கும். முயற்சியில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும். எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும்.
மகரம்
புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய தேடல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
கும்பம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மிக காரியங்களால் மன அமைதி கிடைக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பயனற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.
மீனம்
விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்