Today Rasipalan (25.01.2024): 'இந்த ராசியினருக்கு நெருக்கடி'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவரி 25) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்பு நீங்கும்.
ரிஷபம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கிடைக்கும். அலுவலகத்தில் மாற்றம் ஏற்படும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
உணவு விஷயத்தில் கவனம் தேவை. நெருக்கமானவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்னை குறையும்.
கடகம்
மனதில் புதுவிதமான சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் வந்து செல்லும். கடன் விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
கடனால் சில நெருக்கடிகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதால் மன அமைதி ஏற்படும்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நட்பு வட்டம் விரிவடடையும். பொன், பொருள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும். பங்குதாரர்களால் ஏற்பட்ட இன்னல் அகலும்.
துலாம்
தாயின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனைகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும்.
விருச்சிகம்
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரியுடன் இருந்துவந்த பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருமானத்தில் ஏற்ற, இறக்கம் காணப்படும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தனுசு
மறைமுக எதிர்ப்பு உண்டு. வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிறரை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதியை கையாளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.
மகரம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சில பிரச்னைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த சோர்வு விலகும்.
கும்பம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் கைகூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். குடும்ப ஆதரவு உண்டு.
மீனம்
அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை தேவை. உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டு. நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்