Today Rasipalan (24.01.2024): 'கவனம் தேவை'.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவரி 24) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
வெற்றி நிறைந்த நாள்.வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும்.
மிதுனம்
சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டு. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும்.
கடகம்
மறைமுக வருமானம் மேம்படும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வாய்ப்பு சாதகமாகும்.
சிம்மம்
தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்பு கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொறுமை தேவை.
கன்னி
நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். பேச்சாற்றலால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட உதவி கிடைக்கும்.
துலாம்
உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தொலைந்து போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்னைகள் குறையும். எதிர்பாராத அதிர்ஷ்டகாரமான வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
சொத்துக்களின் மூலம் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மாற்றம் உண்டாகும். தந்தை வழி உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவு நிறைந்த நாள்.
தனுசு
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
மகரம்
கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதார சிக்கல் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும்.
கும்பம்
மனதளவில் சில குழப்பங்கள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் திருப்தியாக இருக்கும்.
மீனம்
நினைவாற்றல் மேம்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை தொடர்பான பணிகளில் சற்று கவனம் தேவை. அதிரடியான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதுவிதமான உணவுகளில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்