தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 23, 2024

Today Rasipalan (23.01.2024): மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 23, 2024 05:11 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 23 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 23ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.
ஜனவரி 23ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அக்கம்,பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். 

ரிஷபம்

புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மிதுனம்

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். 

கடகம்

உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விட்டுக்கொடுத்துத்துச் செல்லவும். வெளியூர் பயணங்களின் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

சிம்மம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். 

கன்னி

வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகப் பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் பிரச்னைகள் குறையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதில் மாற்றம் உண்டாகும். 

துலாம்

தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனை மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். 

விருச்சிகம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனை உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பூர்வீக சொத்துக்களை விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். 

தனுசு

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வணிகம் சார்ந்த விஷயங்களில் சிந்தனை மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்னைகள் குறையும். 

மகரம்

போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். அரசு சார்ந்த பணிகளில் புரிதல் ஏற்படும்.  மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். 

கும்பம்

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

மீனம்

புது விதமான சிந்தனைகள் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். உறவினர்களின் வழியில்  நல்ல் செய்திகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்