தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 22, 2023

Today Rasipalan (22.01.2024): இந்த நாள் எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 22, 2024 05:09 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவரி 22) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 22ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஜனவரி 22ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும்.  இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு ஏற்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். 

ரிஷபம்

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டு. சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும்.  கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

மிதுனம்

உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் பொலிவு வேண்டும். கடன் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.  வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். 

கடகம்

எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். 

சிம்மம்

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். 

கன்னி

குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் சார்ந்த செலவுகள் உண்டாகும். 

துலாம்

வெளியூர் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். செயல்களில் தடைகள் உண்டாகும். குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

விருச்சிகம்

செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமிர்த்தமாக புதிய வாய்ப்பு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். 

தனுசு

இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.  நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும். 

மகரம்

மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். 

கும்பம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். 

மீனம்

அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.  சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்