Today Rasipalan: நெருக்கடிகள் குறையுமா?- 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Horoscope (19.01.2024) : ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவாி 19) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
்
மேஷம்
எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சகோதரர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்
தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.
மிதுனம்
பயணங்களால் அனுகூல பலன் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிக ஈடுபாடு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பெரிய மனிதர்களுடான சந்திப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
சிம்மம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மனைவி வழி உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும்.
கன்னி
கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் நிலவும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அடுத்தவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்
சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டு. அலுவலகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணம் மூலம் வரவு மேம்படும்.
மகரம்
பொருளாதாரம் நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தேவைக்கு ஏற்றவாறு வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். இறை வழிபாட்டால் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்