Tamil News  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 18, 2024

Today Rasipalan (18.01.2024): இந்த நாள் சூப்பரா? சுமாரா? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 18, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவாி 18) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 18ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஜனவரி 18ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் தேவை. தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த சில விரயங்கள் உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.

ரிஷபம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில தடைகளால் மாற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். திடீர் பணவரவு உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

கடகம்

சகோதரர்களின் வழியில் எதிர்பாராத செலவு உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

உணவு விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி

புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்துச் செயல்படவும். அலுவலகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். நினைத்த செயல்கள் முடிவதில் அலைச்சல் ஏற்படும்.

துலாம்

தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். குழந்தைகள் நலனில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். வருமானம் தேவைக்கேற்ப கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகன பராமரிப்பில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும்.

தனுசு

குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்னைகள் குறையும். இளைய சகோதரர்களின் வழியில் புரிதல் ஏற்படும். கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மகரம்

மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயத்தில் அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த வரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ஆவணம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தேவை அறிந்து வாக்குறுதிகளை அளிப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோக உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்