தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 16, 2024

Today Rasipalan 'மாட்டுப்பொங்கல்' - 12 ராசிகளுக்கான இன்றைய சிறப்பு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 16, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் மாட்டுப்பொங்கல் பண்டிகையான இன்று (ஜனவாி 16) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 16ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
ஜனவரி 16ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

உயரதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

மகிழ்ச்சியான செய்திகள் வந்துசேரும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.

மிதுனம்

உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஆடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும்.

கடகம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனம் தேவை. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

கன்னி

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

துலாம்

உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். அடுத்தவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும்.

விருச்சிகம்

தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் மேம்படும்.

தனுசு

வீடு மாற்றம் தொடர்பான எண்ணம் மேம்படும். நறுமண பொருட்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். விவசாயப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள்.

மகரம்

முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உங்கள் மீதான விமர்சனங்கள் நீங்கும்.

கும்பம்

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். வித்தியாசமான பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும்.

மீனம்

மறைமுக எதிர்ப்புகளால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்