தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 15, 2024

Today Rasipalan (15.01.2024): 'தை பிறந்தால் வழி பிறக்கும்'- 12 ராசிகளுக்கான இன்றைய சிறப்பு பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 15, 2024 05:19 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் தைப்பொங்கல் பண்டிகையான இன்று (ஜனவாி 15) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 15 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஜனவரி 15 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒப்பனை துறையில் மேன்மை உண்டாகும். 

ரிஷபம்

எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சமூக நிகழ்வுகள் மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். உயர் கல்வி தொடர்பான குழப்பம் விலகும். குடும்பத்தில் பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களுடன் பொறுமையை கையாளவும். 

மிதுனம்

சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாஸ்திர சடங்குகளை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் வழியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்காளி வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். 

கடகம்

உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் சார்ந்த வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். . சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். 

சிம்மம்

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூரிலிருந்து புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். 

கன்னி

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்னைகள் குறையும். வழக்கு விஷயத்தில் சாதகமான முடிவு ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

துலாம்

மாணவர்களுக்கு மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். தடைகளை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். 

விருச்சிகம்

பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தாய்வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வரவுகளால் நெருக்கடிகள் குறையும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு முடிவு உண்டாகும். 

தனுசு

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.பண விஷயத்தில் கவனம் தேவை. தொழில் நுட்ப தேடல் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். 

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். 

கும்பம்

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். 

மீனம்

சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நம்பிக்கையை உண்டாக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.  குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்