Tamil News  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 14, 2024

Today Rasipalan (14.01.2024): ‘போகி பண்டிகை’ இன்று எப்படி இருக்கும்? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 14, 2024 05:00 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் போகி பண்டிகையான இன்று (ஜனவாி 14) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 14ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஜனவரி 14ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

இன்றைக்கு குழப்பம் விலகும். சமூக பணிகளில் மதிப்பு மேம்படும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.பூர்வீக சொத்துக்களில் மாற்றம் உண்டாகும். மறைவான சில பொருட்களால் ஆதாயம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

மிதுனம்

உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்வில் சில மாற்றமான சூழல் ஏற்படும். துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழல் அமையும். வாகன பயணத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த முடிவுகளில் சில மாற்றம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்

கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். சிலரின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும்.

கன்னி

நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புத்திசாலிதனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள்.

துலாம்

உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பேச்சால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பார்வை தொடர்பான பிரச்னைகள் குறையும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும்.

தனுசு

புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.

மகரம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

கும்பம்

அலுவலக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளிவட்டாரங்களில் அமைதியை கையாளுவது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

மீனம்

புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்