Today Rasipalan (13.01.2024): 'திடீர் யோகம் யாருக்கு'- 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 13 ஆம் நாளான இன்று எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்
சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
ரிஷபம்
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்னை குறையும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். தொழில் தொடர்பாக சில பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும்.
மிதுனம்
பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. உடலில் சோர்வுகள் தோன்றி மறையும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
கடகம்
வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தான, தர்மங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும்.
சிம்மம்
மனதில் உற்சாகம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் விரைவில் நடக்கும். வியாபாரம் சார்ந்த திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கன்னி
சேமிப்பு எண்ணம் மேம்படும். கலைத்துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் கவனமாக செயல்படவும்.
துலாம்
தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் கைகூடுவதற்கான வாய்ப்பு உண்டு. வெளிநாடு பற்றிய சிந்தனை மேம்படும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு சாதகமாகும். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.
தனுசு
பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சகோதர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்துச் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
மகரம்
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆபிஸ் தொடர்பான பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். .
கும்பம்
கடன் சார்ந்த பிரச்னைகள் குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் சுமூகமாக பழகவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மீனம்
குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்