Tamil News  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For January 11, 2024

Today Rasipalan (11.01.2024): 'வரவும் இருக்கு செலவும் இருக்கு' - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 11, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 11 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவாி 11ஆம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஜனவாி 11ஆம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

சுபகாரிய எண்ணம் கைகூடும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத உதவி கிடைக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.  நண்பர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம்

வாகன பயணங்களில் கவனம் தேவை. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் யோசித்து செய்யவும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் உண்டாகும்.

கடகம்

சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும்.

சிம்மம்

எதிர்பார்த்த அளவுக்கு வரவுகள் இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். பணியாளர்களால் லாபம் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள்.

கன்னி

உடன் பயணிப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். சோதனை நிறைந்த நாள்.

துலாம்

உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செலவிற்கேற்ற வரவுகள் கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதாயம் உண்டாகும். மனைவியின் உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம்

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

தனுசு

முன்கோபத்தை குறைப்பது நல்லது. பலமுறை யோசித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம்.

மகரம்

பேசும் போது நிதானம் வேண்டும். சகோதரர் வழியில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

மீனம்

வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்பு ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் அனுசரித்து வேலை வாங்கவும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்