Today Rasipalan (10.01.2024): பிடிவாதம் வேண்டாம்..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 10 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்
வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். சில முடிவுகளை எடுப்பீர்கள் திட்டவட்டமாக.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும்.
மிதுனம்
எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். முயற்சிகள் சாதகமாக முடியும். சோதனை நிறைந்த நாள்.
கடகம்
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பிடிவாதப் போக்கை குறைத்துக் கொள்ளவும்.
சிம்மம்
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
கன்னி
தொலை தூரப் பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். திட்டமிட்டு செயல்படவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.
துலாம்
விலகிப் போன காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். சவாலான செயலை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்
பழைய பிரச்னைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வருமான வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும்.
தனுசு
எதிலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். அரசு சார்ந்த விவகாரங்களில் சிந்தித்துச் செயல்படவும். பெரியவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் ஏற்படும்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.
கும்பம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். இலாபம் நிறைந்த நாள்.
மீனம்
நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை மேம்படும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்