தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (08.01.2024): மேஷம் முதல் மீனம் வரை..பண வரவு யாருக்கு செலவு யாருக்கு? - இன்றைய பலன்கள்!

Today Rasipalan (08.01.2024): மேஷம் முதல் மீனம் வரை..பண வரவு யாருக்கு செலவு யாருக்கு? - இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 08, 2024 05:20 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 08ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பா் 07ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
டிசம்பா் 07ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்

வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.

ரிஷபம்

புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.

மிதுனம்

தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

கடகம்

நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்

அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல் அமையும்.

கன்னி

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

துலாம்

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகாிக்கும்.

விருச்சிகம்

கவனம் வேண்டிய நாள். எந்தவொரு செயலிலும் ஆர்வமின்மை காணப்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும்.

தனுசு

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

மகரம்

சேமிப்பை மேம்படுத்துவது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்

திடீர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.

மீனம்

வியாபாரப் பணிகளில் பொறுமையை கையாளவும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.