Today Rasipalan (07.01.2024): யாருக்கு மகிழ்ச்சி..மேஷம் முதல் மீனம் வரை- 12 ராசிகளுக்கும் உாிய பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (07.01.2024): யாருக்கு மகிழ்ச்சி..மேஷம் முதல் மீனம் வரை- 12 ராசிகளுக்கும் உாிய பலன்கள்!

Today Rasipalan (07.01.2024): யாருக்கு மகிழ்ச்சி..மேஷம் முதல் மீனம் வரை- 12 ராசிகளுக்கும் உாிய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 07, 2024 05:20 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 07 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பா் 7ம் நாளுக்கான 12 ராசிகளின் பலன்களை காணலாம்.
டிசம்பா் 7ம் நாளுக்கான 12 ராசிகளின் பலன்களை காணலாம்.

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும்.

மிதுனம்

பொறுமை வேண்டிய நாள். பொருளாதார நிலை உயரும். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். தாய் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.

சிம்மம்

ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.

கன்னி

கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும்.

துலாம்

விமர்சன கருத்துகளை தவிர்க்கவும். மறதியால் சிறு சிறு பிரசனைகள் நேரிடும். உடல் நலனில் அக்கறை வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம்

சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

தனுசு

தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். பொறுமையுடன் செயல்படவும்.

மீனம்

இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner