Today Rasipalan (06.01.2024): மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 06 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும்.
ரிஷபம்
போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் குறையும். இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத தனவரவு ஏற்படும்.
மிதுனம்
புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் உதவி கிடைக்கும். கடன் பிரச்னைகள் ஓரளவு குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.
கடகம்
பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சில சூழ்நிலைகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் பொறுப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி ஏற்படும்.
சிம்மம்
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.
துலாம்
தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்படவும். தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனை உண்டாகும்.
விருச்சிகம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.
மகரம்
வியாபாரம் ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் சகிப்பு தன்மையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும்.
கும்பம்
சிந்தனையில் மாற்றம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
மீனம்
நண்பர்களின் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வீண்செலவுகளால் மனதில் கவலை ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்iதங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்