Today Rasipalan (04.01.2024): 'யாருக்கு சோதனை, யாருக்கு லாபம்'..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்றைய நாள் (ஜனவாி 04) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
விலகிச்சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்துகொள்வீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக முயற்சிகள் கைகூடும்.
ரிஷபம்
உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும்.
கடகம்
எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.
சிம்மம்
உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எழுத்து துறைகளில் புதிய மாற்றம் ஏற்படும். அனுபவம் மிக்கவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.
கன்னி
சுபகாரிய பயணங்கள் கைகூடும். இணைய வர்த்தக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
துலாம்
சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு
ஆன்மிக நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். கூட்டாளிகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும்.
மகரம்
வியாபாரத்தில் அபிவிருத்திக்காண வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
பொறுமையுடன் செயல்படவும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
எந்த செயலிலும் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சிந்தனையில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சோதனை நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்