Today Rasipalan (29.02.2024): மாதத்தின் கடைசி நாள் எப்படி இருக்கும்? - இன்றைய ராசி பலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் (பிப்.29) இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 25, 2025 12:38 PMகுரு பலன்கள் 2025: குரு சொன்னபடி செய்யும் நேரம் வந்துவிட்டது.. பண யோகத்தை பெற்ற ராசிகள்.. யார் அதிர்ஷ்டசாலி?
Mar 25, 2025 11:44 AMSani Asthamanam: தப்பிச்சு ஓடுங்க மக்களே.. சனி அஸ்தமிக்கிறார்.. இந்த ராசிகள் மீது குறி வைத்து விட்டார்..!
Mar 25, 2025 09:37 AMகோடி கோடியாய் கொட்ட போகிறாரா குரு?.. 2025-ல் ஜாக்பாட் ராசிகள்.. குருபெயர்ச்சி குறி வைப்பது யாருக்கு?
Mar 25, 2025 09:00 AMMoney Luck : சைத்ரா நவராத்திரியில் துர்கா தேவி இந்த 4 ராசிகளுக்கு அருள் புரியப் போகிறாரா.. உங்களுக்கு ஜாக்பாட் சாத்தியமா
Mar 25, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று நம்ம நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 24, 2025 12:55 PMThe new Baba Vanga : புதிய பாபா வாங்கா : ‘பயமுறுத்தும் கணிப்புகள்.. யார் இந்த ஹாமில்டன் பார்க்கர்?
மேஷம்
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்
மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
வியாபாரம் சார்ந்த திட்டங்கள் மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது கவனம் தேவை. மூத்த உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்
கடகம்
சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்க சட்ட விஷயங்களில் விடாமுயற்சியுடன் இருங்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத் தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்மம்
மதிப்புமிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி சாதகமாக முடியும். அக்கம்-பக்கத் தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
இன்று சுமாரான நாள் தான், இருந்தாலும் புதிய முயற்சிகளை காலையிலே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். நிலுவையில் உள்ள பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.
துலாம்
இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணை யால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்னை குறையும். சக ஊழியர்களிடையே வதந்திகளால் வேலையில் ஏற்படும் இடையூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். சர்வதேச வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.
தனுசு
விவேகத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பண வரவு வந்தாலும் கூடவே திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.
மகரம்
வியாபரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும்.
கும்பம்
நிதி சிக்கல்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு இன்று பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
மீனம்
பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்