Today Rasipalan (27.02.2024): 'இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை' - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (27.02.2024): 'இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை' - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (27.02.2024): 'இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை' - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 27, 2024 05:00 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 27 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 27ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 27ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒப்பந்தப் பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

ரிஷபம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் நிலவும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

திட்டமிட்ட வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் ஏற்படும். சக ஊழியர்களால் மனஅமைதி உண்டாகும்.

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தோற்ற பொழிவு பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை தெரிந்துகொள்வீர்கள். விருப்பமான பொருட்களை வாங்குவதில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும்.

கன்னி

குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும்.

துலாம்

தேவையில்லாத செலவுகளை குறைத்து கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சாதகமில்லாத சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நியாயமான பேச்சுக்களால் மதிப்பு மேம்படும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். சொத்து சேர்ப்பது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு

நண்பர்களின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிம்மதி நிறைந்த நாள்.

மகரம்

பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் அலட்சியமின்றி செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் /  வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்