Today Rasipalan (26.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (26.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசி பலன்கள்!

Today Rasipalan (26.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசி பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 26, 2024 05:00 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 26 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 26 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 26 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

காரிய அனுகூலம் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்னைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நவீன யுக்திகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியம் நிறைவேறும்.

கடகம்

உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

வரவுக்கு ஏற்ப செலவு ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பு எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

கன்னி

அலுவலகத்தில் பொறுமை தேவை. சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

துலாம்

வேலையாட்களிடத்தில் ஒத்துழைப்பு குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். இனம்புரியாத புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பலம் மற்றும் பலவீனங்கள் தெரியும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் பயண வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகள் விலகும்.

கும்பம்

சிந்தனைகளில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். அலட்சியமின்றி செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்

அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்