Today Rasipalan (25.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (25.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன்கள்!

Today Rasipalan (25.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 25, 2024 06:03 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 25 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 25 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

குழந்தைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் புதுவிதமான சிந்தனை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம்

யாரையும் நம்ப வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.

மிதுனம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இறை சார்ந்த சிந்தனை ஏற்படும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

கடகம்

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் சாதகமாகும். வியாபாரத் தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி

வியாபாரத்தில் நல்ல லாபமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். முகத்தில் பொலிவு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அதிர்ஷ்டகரமான நாள்.

துலாம்

எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் தேவை.

விருச்சிகம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். தந்தை வழியில் புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும். வேளாண் பணியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். சாதனை நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறு தூர நடை பயிற்சிகளால் மனஅமைதி உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேளாண் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும்.

கும்பம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். 

மீனம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் மனஅமைதி குறையும். காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும். அஞ்ஞான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

Whats_app_banner

டாபிக்ஸ்