Today Rasipalan(24.02.2024): 'எதிர்பார்க்காததும் நடக்கும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 24ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
பெரியோர்களின் அன்பும், ஆலோசனையும் கிடைக்கும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரிய தடைகள் நிவர்த்தியாகும். படிப்பு, தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
மனக்கவலை அதிகரிக்கும். எல்லா வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். தேவையான பணம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்களின் எண்ணங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வீர்கள். குடும்பத்தினரை மகிழ்விப்பதில் அக்கறை செலுத்துவீர்கள். பூமி சம்பந்தப்பட்ட நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
கடகம்
வீண் செலவுகள் ஏற்படக் கூடும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும். முக்கிய வேலைகள் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்
குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வேலை மாற்றம் தொடர்பான எண்ணம் தோன்றும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக வியாபாரி களால் அனுகூலம் உண்டு.
துலாம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். இன்று கடன் கொடுப்பதும், வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
மனதில் சிறு குழப்பம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்படும்.
தனுசு
மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.சில விஷயங்களால் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மகரம்
சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். தேவையற்ற வீண்செலவுகள் கவலையை ஏற்படுத்தும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். நிதானம் தேவை.
கும்பம்
மற்றவர்கள் மீது கோபப்படுவதைத் தவிர்க்கவும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மீனம்
பணிச்சுமை சற்று குறைவாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்