Today Rasipalan(23.02.2024): 'நிதானம் மிக முக்கியம்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 23ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 02:08 PMகேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?
Apr 19, 2025 01:29 PM62 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரிஜாத யோகம்.. எந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் பாருங்க!
மேஷம்
தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி பெறுவீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
மிதுனம்
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில தனவரவுகள் கிடைக்கும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.
கடகம்
நீண்டதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.
சிம்மம்
மறைமுகமாக சில விமர்சனங்கள் வரும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். கவனம் வேண்டிய நாள்.
கன்னி
மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பு மேம்படும். வேலை தொடர்பாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கனிவான பேச்சுகளின் மூலம் ஆதரவு மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.
தனுசு
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எதிலும் நிதானதோடு செயல்படுவது நல்லது.
மகரம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.
கும்பம்
அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் உண்டாகும். கடன் சாதகமாக நடக்கும்.
மீனம்
புதிய முயற்சிகள் நிறைவேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும்.

டாபிக்ஸ்