தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 21, 2024

Today Rasipalan (21.02.2024): 'சிக்கனம் தேவை'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Feb 21, 2024 06:37 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 21 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 21 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 21 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

எதிர்பாராத தனவரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மை உண்டாகும். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். 

ரிஷபம்

நீண்ட நாள் பிரச்னைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். அரசு சார்ந்த வழியில் ஆதரவு ஏற்படும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

மிதுனம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். 

கடகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. 

சிம்மம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும்.  

கன்னி

எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாகும். 

துலாம்

உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சொத்துச் சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.  

விருச்சிகம்

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும். 

தனுசு

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். 

மகரம்

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். 

கும்பம்

தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். திடீர் தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உடன் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.  

மீனம்

கவனம் வேண்டிய நாள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள்.  உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள்.  பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். 

WhatsApp channel

டாபிக்ஸ்