தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 20, 2024

Today Rasipalan(20.02.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Feb 20, 2024 04:45 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிறு துரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு. மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் வழியில் அலச்சல்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

சிந்தனைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களிள் கவனம் வேண்டும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

கடகம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பயணங்களின் மூலம் அணுகூலம் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

சிம்மம்

விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலை விலகும் நாள்.

கன்னி

பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்

மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும்.

விருச்சிகம்

திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு வேலைகளில் பொறுமை வேண்டும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.

தனுசு

வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

மகரம்

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும்.

கும்பம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

மீனம்

நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களின்மீது ஆர்வம் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்