Tamil News  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 13, 2024

Today Rasipalan(13.02.2024): 'இந்த நாள் உங்களுக்கு எப்படி? '..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 13, 2024 04:45 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராசிபலன், பிப்ரவரி 13, 2024
ராசிபலன், பிப்ரவரி 13, 2024

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் தேவை. வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும்.

மிதுனம்

பொறுமை வேண்டும். உடன் இருப்பவர்களால் பொறுப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவது நல்லது. வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.

சிம்மம்

வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.

கன்னி

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்தப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

துலாம்

எதிர்பார்த்த சில தனவரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பிரச்னைகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

தனுசு

புதிய வேலை சார்ந்த எண்ணம் மேம்படும். அதிரடி மாற்றங்களால் லாபம் மேம்படும். கடன் தொடர்பான சிந்தனை ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும்.

மகரம்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணம் மேம்படும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.

மீனம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்