தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 12, 2024

Today Rasipalan(12.02.2024): வாரத்தின் முதல் நாள்.. மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 12, 2024 05:09 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 12 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 12 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.
பிப்ரவரி 12 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

வர்த்தகப் பணிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்

எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டு. கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

கடகம்

எதிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உணவு விஷயத் தில் கவனம் தேவை. எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சக வியாபாரிக ளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர் களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கன்னி

எதிர்பாராத சிலருடைய சந்திப்பு உண்டாகும். கடன் பிரச்னைகள் குறையும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.

துலாம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

தனுசு

புதிய முயற்சிகளை மேற் கொள்ள வேண்டாம். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியா பாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும்

மகரம்

சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம்.

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனஅமைதி குறையும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்