தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 09, 2024

Today Rasipalan(09.02.2024): 'விவாதம் வேண்டாம்'..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Feb 09, 2024 04:45 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 09 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 09ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
பிப்ரவரி 09ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

வாக்குறுதிகள் அளிக்கும்போது கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்

வியாபாரம் சார்ந்த விஷயங்களில் அலைச்சல் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

கடகம்

தன்னம்பிக்கை வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகள் மேம்படும். கடினமான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்

உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் பெற்றோர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் நெருக்கடிகள் குறையும்.

கன்னி

உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிகள் சாதகமாகும்.

துலாம்

கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் சற்று கவனம் வேண்டும்.

விருச்சிகம்

உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

தனுசு

செயல்களில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும்.

மகரம்

முடிவு எடுப்பதில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈடுபாடு உண்டாகும். திடீர் பயணங்களால் சோர்வுகள் ஏற்படும்.

மீனம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்