Today Rasipalan(08.02.2024): 'இனி எல்லாம் சுபமே'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan(08.02.2024): 'இனி எல்லாம் சுபமே'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan(08.02.2024): 'இனி எல்லாம் சுபமே'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Published Feb 08, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 08 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 08 ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 08 ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

மனதில் கற்பனை சார்ந்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும்.

மிதுனம்

எதிலும் பொறுமை தேவை. மனதளவில் சிறு குழப்பங்கள் உண்டாகும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.

கடகம்

சிக்கல் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் குறையும். வருமான வாய்ப்புகள் மேம்படும்.

சிம்மம்

பகை குறையும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கன்னி

வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை அவசியம். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

துலாம்

தனவரவுகளில் மந்தமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். உறவினர்களின் ஆதரவு உண்டு. நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்னைகள் குறையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கை வேண்டும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

தனுசு

நண்பர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். பழைய பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும்.

மகரம்

எதிலும் முயற்சி வேண்டும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கவலைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும்.

கும்பம்

சுபகாரி விஷயங்களில் பொறுமை தேவை. விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்

பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.