Today Rasipalan(06.02.2024): ‘வெற்றிக் கொடிகட்டு’..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!-horoscope today tamil astrological prediction for february 06 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan(06.02.2024): ‘வெற்றிக் கொடிகட்டு’..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan(06.02.2024): ‘வெற்றிக் கொடிகட்டு’..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 06, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 06ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 06ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

எதிலும் சிந்தித்துச் செயல்படவும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயத்தை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். பேச்சுக்களில் பொறுமை தேவை. குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்

உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும்.

கன்னி

சிலருக்கு சுபகாரியம் கைகூடும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சக ஊழியர்களால் மனஅமைதி உண்டாகும். அரசு வழியில் ஒத்துழைப்பு உண்டு.

துலாம்

ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தவிர்ப்பது நல்லது. வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கடன் சார்ந்த விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும்.

விருச்சிகம்

நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்பு மலரும்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அரசு பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படவும்.

மகரம்

வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் ஏற்படும்.

கும்பம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களில் இருந்துவந்த பிரச்னைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

இன்பம் நிறைந்த நாள். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.