தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 01, 2024

Today Rasipalan (01.02.2024): மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?..உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Feb 01, 2024 05:10 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 01 ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 01 ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தகப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் கவனம் தேவை. புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களில் லாபம் மேம்படும்.

கடகம்

கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சுக்களை குறைப்பது மன அமைதியை தரும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு ஏற்படும்.

சிம்மம்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு உண்டு. குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

கன்னி

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தடைப்பட்ட சில தனவரவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் பற்றிய ஆலோசனை கிடைக்கும்.

துலாம்

மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். பயணம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். இரவு நேர பணிகளால் ஆதாயம் உண்டு. பணவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனமாக செயல்படவும்.

தனுசு

பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். பயணம் தொடர்பான சிந்தனை மேம்படும். சேமிப்பு எண்ணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மகரம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு வழியில் சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.

கும்பம்

கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும்.

மீனம்

பேச்சுக்களில் கவனம் தேவை. குடும்பத்தினரிடையே அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். வியாபார முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்