தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For December 21, 2024

Today Rasipalan (21.01.2024): இந்த ஞாயிறு உங்களுக்கு எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான உரிய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 21, 2024 05:00 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவரி 21) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 21ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
ஜனவரி 21ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.

ரிஷபம்

மனதில் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்ப்புகளில் பொறுமையாக இருக்கவும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்

தடுமாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.

கடகம்

எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.

சிம்மம்

மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உடலில் இருந்துவந்த பிரச்னை விலகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலை நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றும். புதிய தொழில் சார்ந்த முயற்சி கைகூடும்.

துலாம்

கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம்

குழந்தைகளால் மதிப்பு மேம்படும். மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

இழுபறியாக இருந்துவந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். லாபம் நிறைந்த நாள்.

மகரம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எதிர்பாராத அலைச்சல் உண்டாகும்.

கும்பம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்களின் வழியில் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் பொறுமை வேண்டும்.

மீனம்

வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்