Today Rasipalan (30.04.2024): 'கவலை விலகும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (30.04.2024): 'கவலை விலகும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (30.04.2024): 'கவலை விலகும்'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 30, 2024 05:59 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 30) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 30 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 30 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான உதவிகள் மேம்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிறந்த செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். கவலை விலகும் நாள்.

மிதுனம்

புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். 

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தனவரவுகளால் நெருக்கடிகள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். 

சிம்மம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.. உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு பிறக்கும். 

கன்னி

திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மறைமுக தடைகளால் காலதாமதம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். 

துலாம்

எதிர்பாராத பயணங்களால் சாதகமான வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் மேன்மை ஏற்படும்.  

விருச்சிகம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். 

தனுசு

பயணங்கள் சாதகமாக அமையும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம்

மனதளவில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். புதிய நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். 

கும்பம்

உடல் நலத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மத்தியமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 

மீனம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9