தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (29.04.2024): மேஷம் முதல் மீனம் வரை வெற்றி யாருக்கு?.. இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (29.04.2024): மேஷம் முதல் மீனம் வரை வெற்றி யாருக்கு?.. இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 29, 2024 05:45 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 29) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 29ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 29ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

மனதில் எண்ணிய சில பணிகள் நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

பயணம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்

மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கடகம்

அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும்.

சிம்மம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும்.

கன்னி

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.

துலாம்

உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும்.

தனுசு

மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் கருத்துகளில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும்.

மகரம்

வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடி உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கும்பம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்