Today Rasipalan (23.04.2024): ‘கவலை மறையும் நாள்’..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 23) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 17, 2025 05:29 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
Apr 17, 2025 05:01 PMநாளைய ராசிபலன்: வருமானம் அதிகரிக்கும், தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.. இந்த ராசிகளுக்கு நாளை எப்படி இருக்கும்?
Apr 17, 2025 03:54 PMமே 7-ம் தேதி மேஷத்தில் புதன்.. புதாதித்ய ராஜ யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள்.
ரிஷபம்
திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். பயம் விலகும் நாள்.
மிதுனம்
பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் பணி நிமிர்த்தமான புதிய இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கடகம்
தடைபட்ட பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். அசையா சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
சிம்மம்
குடும்பத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது குறித்த எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும்.
கன்னி
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். கவலை மறையும் நாள்.
துலாம்
தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் பாக்கிகளை பொறுமையுடன் வசூலிக்கவும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
தனுசு
திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.
மகரம்
முயற்சிக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் தாமதம் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்