தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (22.04.2024): 'வசமாக சிக்கப்போவது யார்?'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (22.04.2024): 'வசமாக சிக்கப்போவது யார்?'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 22, 2024 06:11 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 22) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 22ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 22ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலை குறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் விவேகம் வேண்டும்.

மிதுனம்

வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நறுமணப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

கடகம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நடக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் புரிதல் மேம்படும்.

சிம்மம்

இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்கள் பாடங்களில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி

சமூகப் பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் விவேகம் வேண்டும். வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

துலாம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் புதிய அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை ஏற்படும். எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

தனுசு

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அரசு தொடர்பான துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகப் பணிகளில் உயர்வு ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாக அமையும்.

மகரம்

ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தந்தை வழியில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கத்தினருடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்

பணி நிமிர்த்தமாக எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களால் பொறுப்பு அதிகரிக்கும்.

மீனம்

குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்