Today Rasipalan (21.04.2024): 'நினைத்தது நடக்குமா?'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (21.04.2024): 'நினைத்தது நடக்குமா?'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (21.04.2024): 'நினைத்தது நடக்குமா?'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 21, 2024 05:33 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 21) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 21 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 21 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

பணி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்னைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் சேமிப்பு குறையும்.

மிதுனம்

நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்விர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

கடகம்

கடன் தொடர்பான பிரச்னைகள் குறையும். புதுவிதமான திட்டங்களை உருவாக்குவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும்.

சிம்மம்

மற்றவர்களின் மூலம் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். தாய்வழியில் ஆதரவான சூழல் அமையும். துரித உணவுகளை குறைத்துக் கொள்ளவும். ஆடை, ஆபரணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

கன்னி

தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். கொடுக்கல்,வாங்கலில் கவனம் வேண்டும்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய முடிவுகளில் பலமுறை சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

திறமைகளின் மூலம் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும்.

தனுசு

வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமியார் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும்.

மகரம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறுவது நல்லது. நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்