Today Rasipalan (19.04.2024): இந்த நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 19) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரிஷபம்
தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். புதிய பங்குதாரர்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்.
மிதுனம்
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும்.
சிம்மம்
உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில நினைவுகளால் மனதில் ஒருவிதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.
கன்னி
வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மத்தியமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
துலாம்
நண்பர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும்.
விருச்சிகம்
விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வருவாய் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.
தனுசு
எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமிர்த்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும்.
மகரம்
நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
கும்பம்
சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவுபெறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
மீனம்
நிதானம் வேண்டிய நாள்.உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்