தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (15.04.2024): யாருக்கெல்லாம் கவனம் தேவை.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (15.04.2024): யாருக்கெல்லாம் கவனம் தேவை.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 15, 2024 05:12 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 15) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 15ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 15ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்

தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் பொறுமையை கையாளவும்.

மிதுனம்

அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களால் திருப்தியான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களிடம் பொறுமையை கையாளவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முதலீடு மேம்படும்.

சிம்மம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப்பொருட்களால் லாபம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்துவந்த தாமதம் விலகும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

கன்னி

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமிர்த்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். கவலை விலகும் நாள்.

துலாம்

தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழியில் ஆதாயம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும்.

விருச்சிகம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும்.

தனுசு

சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு ஏற்படும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். 

கும்பம்

சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

மீனம்

தொழில் சார்ந்த அலைச்சல் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் தேவை. சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் /நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்