Today Rasipalan: எதிர்பார்த்தது கிடைக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Today Horoscope (12.04.2024): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 12) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 15, 2025 07:00 AMSani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
Feb 14, 2025 12:28 PMLove : சில ராசிக்காரர்கள் எளிதாக காதலில் விழுவார்களாம்.. அதுவும் இந்த நான்கு ராசிகள் எளிதில் காதல் வயப்படுவார்களாம்!
Feb 14, 2025 11:11 AMMoney Luck: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதியா?
மேஷம்
இன்றைய நாளில் உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும்.
ரிஷபம்
எதிலும் அலட்சியம் இல்லாமல் செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும்.
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். மனதளவில் இருந்துவந்த கவலை விலகும்.
கடகம்
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிலும் பொறுமையை கையாளுவது நல்லது.
கன்னி
தந்தை வழியில் அனுசரித்துச் செல்லவும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை.
துலாம்
மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப மேன்மை ஏற்படும். சகோதரர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மறைமுக திறமையால் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடிவரும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
தனுசு
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். உற்பத்தி தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
மகரம்
வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனை அதிகரிக்கும்.
கும்பம்
கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனை பிறக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும்.
மீனம்
தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். பெரியவர்கள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுத் தொடர்பான துறைகளில் அரசு உதவிகள் சாதகமாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்