தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (10.04.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (10.04.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 10, 2024 05:30 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 10) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 10ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 10ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் தொடர்பு அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.

ரிஷபம்

கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

மிதுனம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும்.

கடகம்

நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனை மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை விலகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும்.சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். பணி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும்.

துலாம்

தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.

விருச்சிகம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்பு சாதகமாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

தனுசு

மேலதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிக்கனமாக செயல்படுவதால் நெருக்கடிகள் குறையும். பெரிய மனிதர்களின் மறைமுக ஆதரவினால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்கவும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்

புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் பொறுமையை கையாளவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

அனுசரித்துச் செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

மீனம்

ஆபரணம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முகத்தில் பொலிவு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் தவறிய சில தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்