Today Rasipalan: ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Today Horoscope (04.04.2024): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 04) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைத் திறனில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்கு மதிப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிதுனம்
எதிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.
கடகம்
சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
சிம்மம்
கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும்.
கன்னி
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.
துலாம்
தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். முக்கியமான பொறுப்புகள் சாதகமாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான பயணம் மேம்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். பெரியவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
தனுசு
உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.
மகரம்
வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.
கும்பம்
வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தடைபட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும்.
மீனம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்