Today Rasipalan(3.4.2024): ‘எதிர்பார்த்தது கிடைக்கும்..முடிவுகள் சாதகமாகும்’.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு மாதத்தின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 03) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவது சிரமங்களை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். நெருங்கிய நபருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. கல்வித்துறையில் பாராட்டுகளை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினரே இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.
மிதுனம்
வழக்கமான பணிகளில் கவனம் தேவை. எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பண நிலைமையை சீராக்க சில முயற்சிகள் தேவைப்படலாம். பணியில் உங்களின் உதவும் குணம் மிகவும் பாராட்டப்படும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும். ஆனாலும், பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு தேவையில்லாத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கும் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு.
சிம்மம்
புதிய முயற்சியில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கான திட்டங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.
கன்னி
நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சம்பந்தமான பிரச்னையில் முடிவுகள் சாதகமாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.
துலாம்
ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை கடைபிடிக்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அதிகரித்த வருமானம் கடனை விரைவாக திருப்பிச் செலுத்த சிலருக்கு உதவும். தொழில்முறை முன்னணியில் ஸ்திரத்தன்மை அடைய வாய்ப்பு உள்ளது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களி டம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். விருந்தினர் வருகையால் இல்லறம் கலகலப்பாக இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.
தனுசு
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பழைய நோய்கள் சரியாகும். உற்சாகமான சுற்றுப்பயணத்தில் உங்கள் அருகில் உள்ளவர்களுடன் நீங்கள் செல்லலாம்.
மகரம்
ஒரு குறிப்பிட்ட உணவைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒரு நீண்ட பயணம் மன சோர்வை போக்க உதவும். எதிலும் பொறுமை அவசியம்.
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொத்து விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.
மீனம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். ஊடகத்துறையில் இருப்பவர்கள் தங்கள் பங்களிப்பிற்காக அங்கீகாரம் பெற வாய்ப்புள்ளது. குழுவாகப் பயணம் செய்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்