தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For April 02, 2024

Today Rasipalan (02.04.2024): ‘கவலைகள் விலகும்..வருமானம் உயரும்’..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 02, 2024 05:15 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு மாதத்தின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 02) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 02ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 02ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மையை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே இன்று உங்களுக்கு மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகலாம். வழக்கு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமிர்த்தமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருக்கவும்.

மிதுனம்

மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

கடக ராசியினரே இன்று எதிலும் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்

குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்புகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை உண்டாகும்.

கன்னி

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்னைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.

துலாம்

துலாம் ராசியினரே இன்று உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு

மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் சில முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும்.

மகரம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுபகாரிய தடைகள் விலகும்.

கும்பம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். கூட்டாளிகளின் வழியில் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

மீனம்

உறவினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் சேமிப்பு குறையும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel